மேலும் செய்திகள்
பொன்னேரி உதவி கமிஷனர் நியமனம்
28-Jan-2025
போலீஸ் துணை கமிஷனராக தேவநாதன் பொறுப்பேற்பு
05-Jan-2025
கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த 83 இன்ஸ்., களுக்கு டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மாநகரில் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த நந்தினி, போத்தனுார் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.,) இன்ஸ்., கனகசபாபதி போத்தனுார் உதவி கமிஷனராகவும், ஈரோடு க்யூ பிரிவு இன்ஸ்., செல்லதுரை ஆர்.எஸ். புரம் உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், காலியாக இருந்த சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., பொறுப்புக்கு ஈரோடு, கொடுமுடி இன்ஸ்., ஏ.சரவணன் மற்றும் போலீஸ் பயிற்சி பள்ளி டி.எஸ்.பி.,யாக தருமபுரி, கோட்டபட்டி இன்ஸ்., ஆர். சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
28-Jan-2025
05-Jan-2025