உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினகிரி கோவிலில் நிதி வசூல் அறநிலையத்துறை எச்சரிக்கை

ரத்தினகிரி கோவிலில் நிதி வசூல் அறநிலையத்துறை எச்சரிக்கை

கோவை : சரவணம்பட்டி கரட்டுமேடு ரத்தினகிரி மலைக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம், திருப்பணி என்ற பெயரில், எவரும் நிதி வசூலில் ஈடுபடக்கூடாது என்று, கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.கோவை - சத்தி சாலை சரவணம்பட்டி கரட்டுமேட்டில், ரத்தினகிரி மருதாசல கடவுள் திருக்கோவில் மலைக்குன்றில் அமைந்துள்ளது. விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர், கோவிலில் திருவிழா, சிறப்பு அபிஷேகம், திருப்பணி என ரசீது புத்தகம் பிரிண்ட் செய்து, கோவில் வளாகத்தில் இருந்தபடி பக்தர்களிடம் நிதி வசூலிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு, இது சென்றதையடுத்து கோவில் நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் 'கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடம் திருவிழா, திருப்பணி, சிறப்பு அபிஷேகம் என்ற காரணம் சொல்லி தனிநபரோ, அமைப்புகளோ, திருக்கோவில் பணியாளர்களோ நிதிவசூலில் ஈடுபடக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை