மாணவர்களுக்கு செஸ் போட்டி; 31க்குள் முன்பதிவு செய்யலாம்
கோவை; எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில் நடக்கும், பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிக்கு வரும், 31ம் தேதிக்குள் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரியின், உடற்கல்வித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி, பிப்., 2ம் தேதி நடக்கிறது.18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு முதல் மூன்று பரிசுகளாக தலா ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்படுகிறது.மாணவ, மாணவியர் பிரிவில் வெற்றியாளர்கள் தலா, 10 பேருக்கு டிராபியும் வழங்கப்படும் நிலையில் வரும், 31ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.நுழைவுக் கட்டணம் கிடையாது. விபரங்களுக்கு, 96550 13890, 98424 32007 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.