கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
கோவை; கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிப்.,மாதம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், எதிர்வரும் இரு வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு, இன்று முதல் வரும் 14 வரை, இரு வாரங்களுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கோவையில் நடக்கிறது. முகாமில் பங்கேற்று, கோழிகளுக்கு இலவசமாக கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்தினை செலுத்தி, பயனடைய கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.