உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு  முதல்வர் கோப்பை செஸ் போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு  முதல்வர் கோப்பை செஸ் போட்டி

கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள் கடந்த, 26ம் தேதி துவங்கியது; செப். 12ம் தேதி நிறைவடைகிறது. கோவையின் பல்வேறு இடங்களிலும் கோ-கோ, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் கடந்த, 26ம் தேதி முதல் செஸ் போட்டிகள் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. பள்ளிகளுக்கான பிரிவில், 465 மாணவர்கள், 218 மாணவியர் பங்கேற்றனர். இதில் ஏழு சுற்றுக்களாக செஸ் போட்டி நடந்தது. போட்டிகளின் நிறைவில் மாணவ, மாணவியர் பிரிவில் தலா முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர் பிரிவில் முதலிடம் பிடித்த சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர் ஆகாஷ், மாணவியர் பிரிவில் நேஷனல் மாடல் பள்ளி சுகிர்தா ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல், கல்லுாரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நேற்று துவங்கியது. இதில், மாணவர்கள், 152 பேர், மாணவியர், 109 பேர் பங்கேற்றனர். ஏழு சுற்றுக்களாக போட்டிகள் நடக்கின்றன. இதில், முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி