மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
17-Feb-2026
போத்தனூர்: குப்பனூர் அருகேயுள்ள செல்லப்பகவுண்டன்புதூர், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு, 35. இவரது நான்கு வயது மகன் சாத்விக்; யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று முன் தினம் பிரபு குடும்பத்துடன் ஒத்தக்கால்மண்டபம், மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். இரவு 7:30 மணியளவில் சாத்விக் வீட்டின் வெளியே காம்பவுண்ட் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த, சிமென்ட் நிலைக்கல்லை பிடித்து, தொங்கி விளையாடினான். எதிர்பாராதவிதமாக நிலைக்கல் சாத்விக்கின் மீது விழுந்ததில் படுகாயமடைந்தான். அருகேயிருந்தோர் சாத்விக்கை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Feb-2026