உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்தாபுதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

சித்தாபுதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

கோவை; சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் குழந்தைகள் விளையாடும் இடம், பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வகுப்பறைகள், பள்ளி வாளாகம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதோடு, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகள் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், சித்தாபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், குழந்தைகள் விளையாடும் பகுதி முறையாக சுத்தம் செய்யப்படாதது, பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த பகுதியில் புல் மற்றும் செடிகள் அதிகமாக முளைத்து, இடம் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால், குழந்தைகள் விளையாடும் போது, விஷப்பூச்சிகள் தீண்டும் அபாயம் உருவாகியுள்ளது.இது குறித்து, பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது, 'எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும், குழந்தைகள் விளையாடும் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்படும். அதனுடன், மணல் நிரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ