உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிழிந்த சீருடைக்கு மாற்று கேட்டு வந்த சிறுவர்கள்

கிழிந்த சீருடைக்கு மாற்று கேட்டு வந்த சிறுவர்கள்

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், அன்னுார் நாகமாபுதுார் பகுதியை சேர்ந்த 14 வயதான 9,ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள் வந்திருந்தனர். இருவரும் நாகமாபுதுாரிலுள்ள அரசு பள்ளியில் படிக்கின்றனர். பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் இருவரும் தங்களது பெற்றோருடன் உதவி கேட்டு, கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். அந்த மாணவர்கள் கூறியதாவது: எங்களது சீருடை கிழிந்துவிட்டது, மாற்று சீருடை கிடைக்கவில்லை. புத்தகம் உள்ளது. ஆனால் நோட்டு வாங்க பணம் இல்லை என்று, பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். பள்ளி நிர்வாகமும் உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் எங்களுக்கு உதவி செய்வதாக சொல்லி ஒரு அமைப்பினர், மனநல காப்பகத்தில் தங்க வைக்க முயன்றனர். நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கிறோம். ஆனால் அந்த அமைப்பினர் எங்களை, அங்கு இருக்க வைக்க முயற்சித்தனர். படிக்க வசதி இல்லாத நிலையில் உதவி கேட்டு வந்தோம். இவ்வாறு, அம்மாணவர்கள் கூறினர். அவர்களுக்கு படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை