உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராயர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா 

கருப்பராயர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா 

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி, கருப்பராயசுவாமி கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, மே 7ல், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனி கருப்பராயசுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. இன்று, 29ம் தேதி நந்தா தீபம் ஏற்றுதல், நாளை கட்டளை பூஜை, மே 7ம் தேதி காலை, 6.00 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை, 7:00 மணிக்கு, முக்கிய வீதிகள் வழியாக, திருத்தேர் திருவீதி உலா நடக்கிறது.மே 8ம் தேதி இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி, 9ம் தேதி மதியம், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !