உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிறிஸ்தவர்கள் கோரிக்கை கல்லறைத்தோட்ட பாதையை மூடியவர்கள் மீது நடவடிக்கை

கிறிஸ்தவர்கள் கோரிக்கை கல்லறைத்தோட்ட பாதையை மூடியவர்கள் மீது நடவடிக்கை

கோவை, : மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மக்கள் மனுக்களை அளித்தனர்.கோவை போத்தனூர் சாரதா மில் சாலை, ஆறுமுகம் பிள்ளை வீதி, வள்ளியம்மை வீதி, முகமது இஸ்மாயில் வீதி, அற்புதம் செட்டியார் வீதியை சேர்ந்த மக்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு பட்டா வழங்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் இறங்கினர்.பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:1936--1937ம் ஆண்டு அரசால் பகிர்ந்த ஏலத்தில் எடுத்த நிலங்களுக்கு எச்.எஸ்.டி., பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடு கட்டி குடியிருக்கிறோம். இது நாள் வரை பட்டா கிடைக்கவில்லை. இந்த சொத்துக்கள் அரசு ஆவணங்களில் ஜி.ஆர். நத்தம் செட்டில்மென்ட் என உள்ளது.குறிப்பாக, க.ச.எண் 268, 269 உட்பட்ட பகுதிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் அரசு நிலம் பதிவு செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அந்த பட்டா நிலத்தை கிரையம் செய்யவோ, வங்கி கடனோ பெறமுடியாது. எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்' என வலியுறுத்தியதோடு, கலெக்டர் அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கசெய்தனர். அதன் பின் மக்கள் அமைதியாக சென்றனர்.n அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள குமரபுரம் பகுதி மக்கள், அதே பகுதியில் நூறு ஆண்டுகளாக வசிக்கும் நிலையில், சாலை பணிக்காக அவர்கள் வசிக்கும் பகுதியை காலி செய்ய கூறி உள்ளனர். ஜடையம்பாளையம் ஊராட்சியில் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.n அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், 'கோவையில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு பணியிலுள்ள காவலர்களை அதிகரிக்க வேண்டும். சி.சி.டி.வி.,கேமரா வைக்க வேண்டும். மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என மனு அளிக்கப்பட்டது.n மேட்டுப்பாளையம் ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த, அய்யப்ப பக்தர்கள் அளித்த மனுவில், '1991-ம் ஆண்டு முதல் சத்தி- மேட்டுப்பாளையம் சாலையில், ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கோவிலை அகற்ற நோட்டீஸ் அளித்துள்ளது. இக்கோவிலை இட்டேரி புறம்போக்கு நிலத்தில் கட்ட அனுமதிக்க வேண்டும்.n மேட்டுப்பாளையம் சாலை பிரஸ்காலனிக்கு அருகே, திருவள்ளுவர் நகரில் கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத்தோட்டத்துக்கு செல்லும் பாதை, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. அதை பயன்படுத்த வழி செய்து கொடுக்க வேண்டும்' என்று, பா.ஜ.,மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்ஸி, கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை