மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ரத்தினபுரி: ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை சரோஜா கூறுகையில், பண்டிகைகளை பள்ளிகளில் கொண்டாடும் போது மாணவர்கள் மதம், இனம் கடந்து ஒன்றிணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது. இது மாணவர்களிடையே சிறுவயதிலேயே மதநல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் விதைக்கிறது. மற்றவர்களின் கலாசாரத்தை புரிந்துகொண்டு மதிக்க, இத்தகைய கொண்டாட்டங்கள் சிறந்த அடித்தளமாக அமைகின்றன, என்றார். சாண்டாகிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.