உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் சினிமா: தமிழக அரசு ஏற்பாடு

பள்ளிகளில் சினிமா: தமிழக அரசு ஏற்பாடு

கோவை; அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்களை திரையிட அரசு ஏற்பாடு செய்துள்ளது. இப்பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் சிறார் திரைப்பட மன்றங்கள் தொடங்கப்பட்டன. திரைப்படங்களை விமர்சன ரீதியில் பார்ப்பது, திரைப்பட நுட்பங்களை அறிவது, ஊடக விழிப்புணர்வு மற்றும் விமர்சன சிந்தனையை வளர்த்தல் ஆகியவை இதன் மூலம் கற்பிக்கின்றனர். இதற்காக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த மன்றங்களில் ஒவ்வொரு மாதமும் சிறார் திரைப்படங்கள் திரையிட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. திரையிட வேண்டிய படங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றப்படும். கடந்த கல்வியாண்டில் மாநில அளவில் நடைபெற்ற சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்ற குறும்படங்களும் திரையிடப்படும். படங்கள் திரையிடுவதை வட்டார கல்வி அலுவலர்கள், வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி