மேலும் செய்திகள்
ஆயுதப்படை போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
23-May-2025
கோவை; கோவை விமான நிலையத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) வீரர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு மையம், பூச்சியியல் துறை சார்பில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்களிடையே தேனீ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், வேளாண்மை, வன சுற்றுச்சூழல், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் தேனீக்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது.பயிற்சியில், பல்வேறு தேனீ இனங்களை அடையாளம் காணுதல், தேன் கூடுகளைக் கையாளுதல், ஆய்வு செய்தல், கூடுகளை ஒன்றிணைத்தல், தேனீ பொருட்களின் உற்பத்தி குறித்து அடிப்படையான விளக்கங்கள் தரப்பட்டன.மேலும், தேனீக்கள் கொட்டுவது குறித்த அச்சத்தைப் போக்க, தேனீக்களை கையாளும் முறை குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பூச்சியியல் துறை பேராசிரியர் சாமிநாதன், சி.ஐ.எஸ்.எப்., சீனியர் கமாண்டன்ட் சஷி ரஞ்சன், துணை கமாண்டன்ட் ஹக்கீம் ஆசிப் யூசுப் பங்கேற்றனர்.
23-May-2025