மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் கோவை_சிட்டி
10-May-2025
ஒத்தக்கால்மண்டபம், சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் யாசின் முகமது, 27; கடந்த 15ம் தேதி ஈச்சனாரி மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த யாசின் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த யாசின், நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கஞ்சா விற்றவர் கைது
குனியமுத்துார் போலீசார், கே.ஜி.கே., ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒருவர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் பெயன் முஜிபுர் ரகுமார், 26 என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். அவரிடம் 200கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குட்கா விற்றவருக்கு சிறை
கணபதி, பாரதி நகர், 4வது வீதியில் உள்ள ஒரு காலி இடத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சம்பத் குமார், 49 என்பவர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த 28 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சம்பத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10-May-2025