மேலும் செய்திகள்
புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு
23-Jun-2025
தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ், 22; தனியார் நிறுவன ஊழியர். இவரது தாயார், சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் இறந்த சோகத்தில் தனுஷ் மனவேதனையுடன் இருந்தார். இரவு வீட்டில் துாங்கச் சென்றார். அவரது தந்தை நள்ளிரவு, தனுஷ் அறைக்குச் சென்று பார்த்தபோது, மின் விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். பெரிய கடை வீதி போலீசார் விசாரிக்கின்றனர். குட்கா விற்ற ஐவர் கைது
கோவை மாநகர பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். தடாகம் ரோடு, குமரன் கல்யாண மண்டபம் ரோட்டில் உள்ள ஒரு ஆவின் பூத்தில் குட்கா விற்பது தெரியவந்தது. இதேபோல், கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் நேரு வீதியில் உள்ள ஒரு கடையில் குட்கா பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரு இடங்களில் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.இதேபோல், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடை, பேக்கரி மற்றும் பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள ஒரு பேக்கரி ஆகிய மூன்று இடங்களில் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கிருந்த குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து, விற்பனை செய்த போத்தனுாரை சேர்ந்த கோபிநாத், 40, ஈச்சனாரியை சேர்ந்த பழனிசாமி, 47 மற்றும் திருச்சியை சேர்ந்த யுவராஜ், 24 ஆகிய மூவரை கைது செய்தனர்.
23-Jun-2025