மேலும் செய்திகள்
லாட்டரி விற்றவர் கைது
14-Jul-2025
பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் மிது மன்ஜி, 32. கோவையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், கோவை மதுக்கரை மார்கெட் ரோடு காமராஜர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மிதுமன்ஜி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். புகையிலை விற்ற இருவர் கைது
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் மகளிர் பாலிடெக்னிக் பகுதியில் புகையிலை விற்பனை குறித்து சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. கடை உரிமையாளர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த திருப்பதி, 24 என்பவரை கைது செய்தனர். அதேபோல், சிங்காநல்லுார் போலீசார் நடத்திய சோதனையில், எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த விஜய், 28 என்பவரை கைது செய்தனர். இரு வழக்குகளிலும், 119 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாட்டரி விற்ற மூவருக்கு சிறை
உக்கடம் போலீசாருக்கு ஒப்பணக்கார வீதியில், லாட்டரி விற்பனை நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ், 47, போத்தனுார் மைல்கல்லை சேர்ந்த இஸ்மாயில், 44, வேலந்தாவளத்தை சேர்ந்த பிரபு, 39 ஆகியோர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 20 கேரள மாநில லாட்டரிகள், மூன்று மொபைல்போன்கள், ரூ.3,300 பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் சாய்பாபா காலனி போலீசார் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கணுவாய், வி.எம்.டி., நகரை சேர்ந்த சுப்ரமணி, 65 என்பவரை கைது செய்தனர்.
14-Jul-2025