உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

குளத்தில் விழுந்து பெண் பலி

கோவை குனியமுத்துாரை சேர்ந்தவர் அஜிமா, 56. கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 8-ம் தேதி வெளியில் சென்ற அஜிமா வீடு திரும்பவில்லை. பல்வேறு பகுதியில் தேடியும், கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் கரும்புக்கடை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்த பெண் அஜிமா என தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

மது விற்பனை; ஒருவர் கைது

கோவை மதுவிலக்கு போலீசாருக்கு சவுரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் அங்கு மதுவிற்பனையில் ஈடுபட்ட, சிவகங்கை மாவட்டம் அனுமந்தன்குடியை சேர்ந்த கருப்பையா, 46 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை