உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

மொபைல் போனை பறித்தவர் கைது குனியமுத்துார், சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்த அன்வர்பாஷா,25, தடாகம் ரோட்டில் ஓட்டல் முன் நின்று, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். கே.கே.புதுாரை சேர்ந்த சதீஷ்குமார், அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரித்து, சதீஷ்குமாரை சிறையில் அடைத்தனர். கஞ்சா கடத்தியவர் கைது சிங்காநல்லுார் போலீசார், நீலிகோணம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த, சலிவன் வீதியை சேர்ந்த சரவணன்,25, அபி விஷ்ணு,26, ஆகியோர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. நீள அரிவாள் ஒன்றும் வைத்திருந்தனர். அபிவிஷ்ணு தப்பி ஓட்டம் பிடித்தார். சரவணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கையும் களவுமாக சிக்கிய பைக் திருடன் நீலிக்கோணம்பாளையம், எம்.ஜி.ஆர்., லே-அவுட்டை சேர்ந்த மோகன்ராஜ், வீட்டுக்கு முன் பைக்கை நிறுத்தி இருந்தார்.மறுநாள் பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரியவந்தது. தேடிப்பார்த்தபோது, கருப்பராயன் கோவில் அருகே நின்றிருந்தது. விசாரித்தபோது, செந்தோட்டத்தைச் சேர்ந்த சூர்யா,24, என்பவர் திருடியது தெரிந்தது. சிங்காநல்லுார் போலீசார், சூர்யாவை கைது செய்தனர். பெயின்டர் தவறி விழுந்து பலி கோவை, பா.நா.பாளையத்தில் வசித்தவர் ராஜா,42; பெயின்டர். துடியலுார், ருக்கம்மாள் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு பெயின்டிங் வேலைக்குச் சென்றார். வேலை முடிந்ததும், அந்த வீட்டின் மேற்கூரையில் ஏறி, முருங்கை இலை பறித்தார். ஆஸ்பெட்டாஸ் கூரை உடைந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர். மிரட்டல் விடுத்தவர் கைது கோவை, காந்தி மாநகரை சேர்ந்தவர் விஜய்,26; தனது தாயாரிடம் சொத்தை எழுதிக் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் குடும்பத்தினர் வீட்டிலிருந்தபோது, விஜய் மீண்டும் தகராறு செய்தார். காஸ் சிலிண்டர் டியூப்பை திறந்து விட்டு, தீ வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சரவணம்பட்டி போலீசார் விரைந்து வந்து, விஜயை கைது செய்து விசாரிக்கின்றனர். 13 கிலோ புகையிலை பறிமுதல் குனியமுத்துார் எஸ்.ஐ., வீரபாவானந்தம் கோவைப்புதுார் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டார். நாக பிள்ளையார் கோவில் அருகே உள்ள இளங்கோ, 64 என்பவரது கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 13.915 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றுடன், ரூ.17 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இளங்கோவும் கைது செய்யப்பட்டார். மளிகை கடையில் திருட முயற்சி கோவை, பி.என்.புதுார், நேதாஜி வீதியில் மளிகை கடை நடத்துபவர் முருகேசன். கடையை பூட்டி விட்டு, துாத்துக்குடிக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இரண்டு நாள் கழித்து திரும்பி வந்தபோது, கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர். 7 பவுன் நகை திருட்டு ஈச்சனாரி, அய்யப்பன் நகரில் வசிப்பவர் ஹரிகிருஷ்ணன். வீட்டை பூட்டி விட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஏழு பவுன் நகை மற்றும், 50 கிராம் வெள்ளி திருட்டு போயிருந்தது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !