உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

பைக் திருட்டு

கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜான்டேனியல். இவருக்கு சொந்தமான யமஹா பைக்கை, பெரிய கடை வீதியிலுள்ள அவரது சகோதர்வீட்டு முன் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக் மாயமாகியிருந்தது. இது குறித்து ஜான் டேனியல் பெரியகடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரிக்கின்றனர்.

குடிபோதையில் பலி

ராமநாதபுரம், பாரதி நகர், 6 வது வீதியில் வசித்து வந்தவர் ரவிகுமார்,50. அதிக மதுகுடிக்கும் பழக்கத்தால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த இவர், தொடர்ந்து மது குடித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை