தூய்மை தீபாவளி கொண்டாட்டம்
பொள்ளாச்சி: வேட்டைக்காரன்புதூரில் தூய்மை பணியாளர்களுடன் த.வெ.க., சார்பில் தூய்மை தீபாவளி கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் த.வெ.க., சார்பில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து முதலாம் ஆண்டு துாய்மை தீபாவளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், வேட்டைக்காரன்புதூர் பேரூர் செயலாளர் மைக்கல் மனோஜ் குமார், இணைச்செயலாளர் விதுன் குமார், கட்சியினர் என, பலர் பங்கேற்றனர். மேலும் இவ்விழாவில், 150 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.