உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலநிலை ஆராய்ச்சி நிலைய வெள்ளி விழா கருத்தரங்கு

காலநிலை ஆராய்ச்சி நிலைய வெள்ளி விழா கருத்தரங்கு

கோவை : கோவை வேளாண் பல்கலையில் செயல்படும், வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, தமிழகத்தில் காலநிலையைத் தாங்கும் கிராமங்களுக்கான வழிகாட்டுதல் என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கு நடந்தது.பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, காலநிலை ஆராய்ச்சி நிலையத்தின் 25 ஆண்டு வளர்ச்சி குறித்து விளக்கினார்.பல்வேறு துறை நிபுணர்கள், வெவ்வேறு காலகட்டங்கள், துறைகளில் வேளாண் கால நிலை ஆராய்ச்சிகளின் பங்களிப்பு குறித்து விளக்கினர்.பயிர் மேலாண்மை இயக்குநர் கலாராணி, தொலைநிலைக் கல்வி இயக்குநர் பாலசுப்பிரமணியம், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன், கோவை, கரும்பு இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் கோவிந்தராஜ் உட்பட, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !