உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சி.எம்.எஸ். கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா

 சி.எம்.எஸ். கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா

கோவை: குமிட்டிபதி, சி.எம்.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 12வது பட்டமளிப்பு விழா நடந்தது. சி.எம்.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் கீரீசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பட்டதாரிகளை வாழ்த்தினார். நிகழ்வில், 326 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. முதல்வர் சுதா பட்டமளிப்பு அறிக்கையை வாசித்தார். விழாவில், 326 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் செயலாளர் சந்திரகுமார், பொருளாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !