மேலும் செய்திகள்
தேங்காய் விலை ஏலத்தில் உயர்வு
16-Oct-2026
அன்னூர்: அன்னூரில் ஏல விற்பனையில் தேங்காய் விலை குறைந்தது. அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர வேளாண் விளைபொருட்களின் ஏல விற்பனை நடந்தது. இதில், 8,900 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சம், 46 ரூபாய் 10 பைசா முதல், அதிகபட்சமாக 50 ரூபாய் 65 பைசா வரை விற்பனையானது. தேங்காய் கொப்பரை, 50 மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு கிலோ குறைந்தது, 110 ரூபாய் 15 பைசா முதல், அதிகபட்சமாக 158 ரூபாய் 76 பைசாவுக்கு விற்பனையானது. தேங்காய் தொட்டி 90 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ 30 ரூபாய் 76 பைசா என விற்பனையானது. மொத்தம் ஆறு லட்சத்து 37 ஆயிரத்து 1220 ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையானது. 89 விவசாயிகள் பங்கேற்றனர். இத்தகவலை கோயம்புத்தூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்தார். கடந்த வாரத்தை விட தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
16-Oct-2026