வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sri
மார் 27, 2025 00:11
கோவைப்புதூர் பகுதியில் 75 ரூபாய் அளவில் ஒரு கிலோ விற்கின்றனர்
அன்னுார்: ஏல விற்பனையில், தேங்காய் கிலோ 63 ரூபாய்க்குவிற்பனையானது. அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமையன்று விவசாய விளை பொருட்களின் ஏல விற்பனை நடைபெறுகிறது. நேற்று தேங்காய் விற்பனை நடைபெற்றது. இதில் 212 கிலோ தேங்காய் விற்பனைக்கு வந்திருந்தது. குறைந்தபட்சம் ஒரு கிலோ 42 ரூபாய் 45 பைசா முதல், அதிகபட்சம் 63 ரூபாய் 20 பைசா வரை விற்பனையானது. 'விவசாயிகள் புதன் தோறும் நடைபெறும் ஏல விற்பனையில் பங்கேற்று பயன்பெறலாம்,' என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கோவைப்புதூர் பகுதியில் 75 ரூபாய் அளவில் ஒரு கிலோ விற்கின்றனர்