உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வரை வரவேற்க தயாராகிறது கோவை கலெக்டர் அலுவலகம் 

முதல்வரை வரவேற்க தயாராகிறது கோவை கலெக்டர் அலுவலகம் 

கோவை; கோவைக்கு வருகை தரும், தமிழக முதல்வர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தங்கநகை தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, உரை நிகழ்த்துகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு, நவ.,5ல் வருகை தருகிறார். பீளமேடு டைடல் பார்க் திறப்புவிழாவை தொடர்ந்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில், தங்கநகை தொழிலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்று கிறார்.முதல்வர் கலெக்டர் அலுவலகம் வருகையை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகம் ஒட்டடை அடித்து துாய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளையடிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வர் பங்கேற்கும் கருத்தரங்க கூடத்தில் உள்ள, ஆறு ஏ.சி.,க்கள் துாசி தட்டி, துாய்மைப்படுத்தி காஸ் நிரப்பப்பட்டுள்ளது.அந்த அரங்கில் உள்ள மின்விசிறிகள், ஸ்பாட் லைட்டுகள் சரிசெய்யப்பட்டன. மேடையில் வைக்கும் நான்கு ஏர் கூலர்கள் சர்வீஸ் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பழைய மேடை இருக்கைகள் மாற்றப்பட்டு, புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.மைக்குகள், ஒட்டுமொத்த சவுண்ட் சிஸ்டம் அனைத்தும், சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கும் பணிகளை, தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி குடிநீர், மின்விசிறி, இருக்கைகள் ஒவ்வொன்றும் சரிபார்க்கப்பட்டு வருவதாக, கூறுகின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை