உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை வணிகவரித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷனை மீண்டும் அமல்படுத்த கோரி, கோவை வணிக வரித்துத்துறை பணியாளர்கள் சங்கங்கள் சார்பில், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிலால்மத்துார் தலைமை வகித்தார்மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் பேசியதாவது: தி.மு.க., அரசு, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய, அமைத்துள்ள அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும். ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது போல், இங்கும் அமல்படுத்த வேண்டும்.தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில், சி.பி.எஸ்., திட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம், தமிழகத்திலும் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் 100க்கு மேற்பட்ட வணிகவரித்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை