கோவை மாநகராட்சி சொத்து வரி ரூ.464.71 கோடி வசூலித்து சாதனை
கோவை : கோவை மாநகராட்சி நிர்வாகம், 27ம் தேதி வரை, சொத்து வரியாக ரூ.464.71 கோடி வசூலித்து, இலக்கை கடந்திருக்கிறது. இதற்கு மாமன்ற கூட்டத்தில், மேயர் ரங்கநாயகி, வாழ்த்து தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் (2024-25) கோவை மாநகராட்சி, மார்ச் 31 வரை, ரூ.462.21 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 27ம் தேதி வரை, ரூ.464.71 கோடி வசூலித்து, இலக்கை தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.இதில், வடக்கு மண்டலம் - 92.12 சதவீதம், கிழக்கு - 91.30 சதவீதம், மேற்கு - 90.88 சதவீதம், மத்தியம் - 89.79 சதவீதம், தெற்கு மண்டலத்தில் 87.25 சதவீதம் என, மொத்தம் - 90.45 சதவீதம் சொத்து வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.சொத்து வரி வசூலில் வடக்கு மண்டலம் முதலிடத்திலும், தெற்கு மண்டலம் கடைசி இடத்திலும் இருக்கிறது. வரி வசூல் இலக்கை தாண்டியதால், நேற்று நடந்த மன்ற கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு, மேயர் ரங்கநாயகி பாராட்டு தெரிவித்தார்.