உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குற்றாலம் இன்று திறப்பு

கோவை குற்றாலம் இன்று திறப்பு

தொண்டாமுத்தூர்: கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சீரானதால், இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியின் நடுவே, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நீர்வீழ்ச்சியில், கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த அக்டோபர் 22ம் தேதி முதல், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். 16 நாட்களுக்குப் பின், தற்போது கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து சீரானதால், இன்று முதல் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை