கோவை மாநகர் மாவட்டம் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
கோவை:தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக பொறுப்பாளர்கள் கூட்டம், மாவட்ட தி.மு.க.அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். எம்.பி.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். அதில், 'அண்ணாதுரை பிறந்த நாளான 15ம் தேதி, காந்திபுரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அளவில், மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட, 870 ஓட்டுச்சாவடிகளில் உள்ள பள்ளி மைதானங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்பங்களை அழைத்து வந்து, மண்-மொழி-மானம் காப்பதற்கான உறுதிமொழியை, முன்மொழிய வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா, பொருளாளர் முருகன், சட்டத்துறைஇணை செயலாளர் அருள்மொழி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.