உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை வழி முசாபர்பூர் வாராந்திர சிறப்பு ரயில்

 கோவை வழி முசாபர்பூர் வாராந்திர சிறப்பு ரயில்

கோவை: கோடை காலத்தில் பயணிகள் வசதிக்காக எர்ணாகுளம்-முசாபர்பூர்(பீஹார்) இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து வரும் 10, 17, 24ம் தேதிகளில்(வெள்ளி தோறும்) இரவு 9:30க்கு புறப்படும் ரயில்(06085) திங்கள் காலை 7:30க்கு முசாபர்பூர் அடைகிறது. முசாபர்பூர் சந்திப்பில் இருந்து வரும் 13, 20, 27ம் தேதிகளில்(திங்கள் தோறும்) இரவு 9:15க்கு புறப்படும் ரயில்(06086) வியாழன் காலை 10:45க்கு எர்ணாகுளம் அடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ