உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில்  மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பு: செந்தில் பாலாஜி

கோவையில்  மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பு: செந்தில் பாலாஜி

கோவை : கோவை கலெக்டர் அலுவ லகத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில்ஆறு இடங்களில், மழை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரைஅப்புறப்படுத்தும் பணி, துரிதமாக நடந்து வருகிறது.எதிர்வரும் நாட்களில்,கனமழை பெய்யும் போதெல்லாம் பாதிப்புக்குள்ளானஆறு இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க, தண்ணீர் உறிஞ்சும் ராட்சத மோட்டார் பம்ப்கள் பொருத்தப்படும்.மழை பெய்யும் சூழலுக்கு ஏற்ப, கனரக, இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வெவ்வேறு வழிகளில்செல்ல,ஏற்பாடு செய்யப்படும்.மழை காலத்தில் மின் தடை ஏற்படாத வகையில், பணி மேற்கொள்ள மின்வாரிய அதிகாரிகள் முன்னதாகவே, சிறப்பு கூட்டம் நடத்தி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், இதுவரை மின்சார பாதிப்புகளோ,மின்சார துண்டிப்போ இல்லை. பாதிப்புகள் இருந்தால், மின்வாரிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.கன மழையின் போது,உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க, மின்விநியோகம் அவ்வப்போது நிறுத்திமீண்டும் வழங்கப்படும்.கோவையில்மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் இருநாட்களாக கனமழை பெய்தும், போக்குவரத்து நெரிசல் இல்லை.கலெக்டர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளையும் இணைத்து, மழை தடுப்புப்பணிகளுக்காக, 'வாட்ஸ் அப்' குழுக்கள் துவங்கி,பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு, அமைச்சர் கூறினார். கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை