உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., டிராபியை தட்டி சென்றது கோவை ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி!

பி.எஸ்.ஜி., டிராபியை தட்டி சென்றது கோவை ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி!

கோவை; மாநில அளவிலான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டியில், கோவை ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., பி.பி.சி., அணி, முதல் பரிசை தட்டியது. பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி கூடைப்பந்து அரங்கில், 'பி.எஸ்.ஜி., டிராபி', 9வது மாநில அளவிலான பொன் விழா ஆண்டு கூடைப்பந்து போட்டி ஐந்து நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், கோவை, நீலகிரி, திருப்பூர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 35 அணிகள் களம் இறங்கின. தலைசிறந்த அணிகள் என்பதால் பார்வையாளர்களுக்கு, உற்சாகத்தை ஏற்படுத்தியது. பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியும், யுனைடெட் பி.பி.சி., அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், எஸ்.டி.ஏ.டி., அணி, 43-40 என்ற புள்ளிகளில் வெற்றிபெற்றது. எஸ்.டி.ஏ.டி., அணி வீரர் ரிஷிகேஸ், 28 புள்ளிகளும், யுனைடெட் அணி வீரர் பரத், 17 புள்ளிகளும் அதிகபட்சமாக எடுத்தனர். இரண்டாம் அரையிறுதியில், கோவை ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., பி.பி.சி., அணியும், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியும் மோதின. இதில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி, 48-32 என்ற புள்ளிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி வீரர் சஞ்சை விஷ்ணு, 24 புள்ளிகளும், எதிரணி வீரர் பாலமுருகன், 22 புள்ளிகளும் எடுத்தனர். இறுதிப்போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியை வீழ்த்தி முதல் பரிசை தட்டியது. சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மூன்றாம் இடத்தையும், கோவை யுனைடெட் பி.பி.சி., அணி நான்காம் இடத்தையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பரிசுகள் வழங்கினார். பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை