கோயம்புத்துார் சகோதயா தடகளம் கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு
கோவை: கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகளின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடக்கின்றன.ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 45வது கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. சக்தி சர்வதேச பள்ளி நடத்தும் இப்போட்டியில், 113 பள்ளிகளில் இருந்து, 3,100 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.போட்டிகளை, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் துவக்கி வைத்தார். சக்தி இன்ஜி., கல்லுாரி சேர்மன் தங்கவேலு, செயலாளர் தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நேற்று, 400 மீ., தடகள இறுதிப் போட்டி, 60, 80, 100, 110 மீ., தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.இன்று, தொடர் ஓட்டம், 200 மீ., இறுதிப் போட்டி உட்பட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாலை 4:00 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்க உள்ளார். கோயம்புத்துார் சகோதயா பள்ளி குழும 'சேர் பெர்சன்' நவமணி, தலைவர் சுகுணா தேவி, சக்தி இன்ஜி., கல்லுாரி சேர்மன் தங்கவேலு, செயலாளர் தீபன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.