உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வீடுகள்; முன்னுதாரணமாக திகழ்கிறது கோவை

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வீடுகள்; முன்னுதாரணமாக திகழ்கிறது கோவை

கோவை ;தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது குடும்பத்தார் மட்டும் வசிக்கும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம், தமிழகத்தின் முதல் ஒருங்கிணைந்த வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.கோவை செட்டிபாளையத்தை அடுத்த, ஓராட்டுக்குப்பை கிராமத்தில், 3.98 ஏக்கர் நிலத்தில், 86 வீடுகளை முழுக்க, முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்காக ஜி.டி.நாயுடு அறக்கட்டளை உதவியோடு கட்டி, விரைவில் அர்ப்பணிக்க உள்ளது, மாவட்ட நிர்வாகம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, கழிவறைகள் உள்ளன. இரண்டு சென்ட் இடத்தில், முக்கால் சென்ட்டில் வீடுகள் அமைந்துள்ளன. கோவை மாவட்டத்தில் கடும் சிரமத்திற்கிடையே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள், பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 2023ம் ஆண்டில், மாநில அரசு, 113 பயனாளிகளுக்கு இலவச நிலம் ஒதுக்கியது. அதில் 86 பேர் ஆர்வத்தின் அடிப்படையில் வீட்டுவசதி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டனர்.பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் கூறியதாவது: ஒவ்வொரு வீட்டுக்கும் 6.6 லட்சம் செலவாகும். இதில், 2.10 லட்சம் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்திலிருந்தும், 4.40 லட்சம் ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.86 வீடுகள் மொத்தம் 25.39 கோடி செலவில் கட்டப்பட்டன, இதில் தொண்டு நிறுவனங்கள் சார்பில், ரூ.3.68 கோடியும் அடங்கும். கூடுதலாக ரூ.1.31 கோடிக்கு குடிநீர் வழங்குதல், மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய், மேல்நிலை தொட்டி, சாலை மற்றும் தெரு விளக்கு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.இவ்வாறு, மனோரஞ்சிதம் கூறினார். இக்குடியிருப்பு வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும், சாய்வுப் பாதைகள், சறுக்கும் கதவு மற்றும் டோல் கேட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை