உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு

கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு

போத்தனூர் : கோவை, சிட்கோ மேம்பாலம் அடுத்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பின் அலுவலகத்தை ரத்தினம் கல்வி குழுமம் மற்றும் இவ்வமைப்பின் தலைவர் மதன் செந்தில் திறந்து வைத்தார்.அமைப்பின் நிர்வாகி தீபம் சாமிநாதன் பேசுகையில் ''இப்பகுதியில். குப்பை கழிவு கொட்டுதல், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டு பணி நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் உள்ளன. இவற்றை தீர்க்க பல்வேறு அமைப்பினர், தனி நபர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் இவ்வமைப்பில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள், என்றார்.அதன்படி மாசு சார்ந்த பிரச்னைகளை குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டு குழு செயலாளர் மோகன் மற்றும் ஆனந்த், ரயில்வே சார்ந்த பிரச்னைகளை லட்சுமி நாராயணன், பதுருதீன், சுற்றுச்சூழலுக்கு பசுமை தேசம் ராஜேந்திரன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், விமானம் நிலையம் சார்ந்த பிரச்னைகளை நாகராஜ் உள்ளிட்டோர் கவனிப்பர் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து சிவராஜ், ராஜேந்திரன், ரங்கராஜ், மோகன் உள்பட பலர் பேசினர். முன்னதாக இவ்வமைப்பை சேர்ந்த மகேஷ் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விஜயகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.கோவை ரத்தினம் கல்லுாரியில் தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பின் அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. இதை ரத்தினம் கல்லுாரி தாளாளர் மதன் செந்தில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் (இடமிருந்து) கூட்டமைப்பின் நிர்வாகிகள் மோகன சுந்தரராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை