உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் இன்று ரேக்ளா பந்தயம்

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் இன்று ரேக்ளா பந்தயம்

போத்தனூர்: கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மற்றும் வெள்ளலூர் மண்டல் பா.ஜ., சார்பில், இன்று ரேக்ளா பந்தயம் நடக்கிறது.தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக, எல் அண்ட் டி பை-பாஸ் அருகே கள்ளப்பாளையம் -- இடையர்பாளையம் செல்லும் சாலையில், இன்று காலை 7:00 மணிக்கு பந்தயம் துவங்குகிறது.இதில் இரண்டு முதல் நான்கு பல் வரையான காளைகள் பிரிவுக்கு, 200 மீட்டர் பந்தய தூரம். ஹோண்டா ஷைன் பைக், 6 கிராம், நான்கு கிராம், இரண்டு கிராம் தங்க நாணயங்கள் முறையே முதலிடம் துவங்கி நான்கு இடங்களில் வருவோருக்கும், ஐந்து முதல் 10 வரையான இடங்களை பிடிப்போருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், 11 முதல் 30 வரையான இடங்களை பிடிப்போருக்கு தலா, 30 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது.அது போலவே, ஆறு பல்லுக்கு மேல் உள்ள காளைகளுக்கு, 300 மீட்டர் பந்தய தூரமாகும். இதிலும் முதல் பரிசாக பேஸன் பிளஸ் பைக்கும், இரண்டு முதல் 30 இடங்களை பிடிப்போருக்கு, 200 மீட்டர் பிரிவில் வழங்கப்படும் அதே பரிசுகள் வழங்கப்படுகின்றன.நிகழ்ச்சியில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை ராதிகா, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்தராஜன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ