உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குதிரையேற்ற போட்டிக்கு கோவை மாணவர் தேர்வு

குதிரையேற்ற போட்டிக்கு கோவை மாணவர் தேர்வு

கோவை:பஹ்ரைனில் நடக்கும் ஆசிய அளவிலான குதிரையேற்ற போட்டியில் பங்கேற்க, கோவையை சேர்ந்த மாணவன் தேர்வாகியுள்ளார். ஆசிய அளவில் வரும் 24ல், பஹ்ரைனில் குதிரை உயரம் தாண்டுதல் போட்டி நடக்கிறது. இந்திய அளவில் இந்த போட்டியில் பங்கேற்க, நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். சர்வதேச அளவிலான வீரர்கள் பலர் பங்கேற்கின்றனர். ஷோ ஜம்பிங் என்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான குதிரையேற்ற போட்டியில் பங்கேற்க, கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி மாணவர் ஹர்ஷித் தேர்வாகியுள்ளார். திருப்பூரை சேர்ந்த ஹர்ஷித், அவரது பயிற்சியாளர் சரவணன் ஆகியோர் கூறுகையில், “இந்தியா சார்பில் பங்கேற்கும் நான்கு வீரர்களில் ஒருவராக தேர்வானதில் மகிழ்ச்சி. பஹ்ரைன் நாட்டில், ' யங் ஏசியன் சாம்பியன்ஷிப் எனும், ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்கிறேன். நிச்சயமாக கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் உள்ளோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை