11.95 வினாடிகளில் 100 மீ., கோவை மாணவி சபாஷ்
கோவை : ஈரோட்டில் நடந்த, 100 மீ., ஓட்டத்தில் கோவை மாணவி, 11.95 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.மாநில அளவிலான தடகள போட்டிகள் ஈரோடு, வ.உ.சி., மைதானத்தில் நடந்தது. இதில், கோவை மாவட்டத்தில் இருந்து, 100 மீ., 200 மீ., 400 மீ., தொடர் ஓட்டம், வட்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 100 மீ., மற்றும் 200 மீ., தடகளப் போட்டியில் சி.எம்.எஸ்., பள்ளி மாணவி தியா தங்க பதக்கங்கள் வென்றுள்ளார். இவர், 100 மீ., ஓட்டத்தில், பந்தய துாரத்தை, 11.95 வினாடியில் கடந்து புதிய சாதனை படைத்து, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.