உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சர்வதேச சிலம்பாட்ட போட்டி: கோவை மாணவர்கள் அசத்தல்

 சர்வதேச சிலம்பாட்ட போட்டி: கோவை மாணவர்கள் அசத்தல்

பெ.நா.பாளையம்: நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பாட்டப் போட்டிகளில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்கம் வென்றனர். நேபாளத்தில் ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச சிலம்பாட்டப் போட்டி நடந்தது. இதில்,பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள புதிய தமிழன் அகாடமியை சேர்ந்த மாணவர்கள், தலைமை பயிற்சியாளர் ஆல்பர்ட் தலைமையில், 10 மற்றும், 14 வயது உட்பட்ட மாணவர்களுக்கான ஒற்றைக்கம்பு பிரிவில் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில், 10 வயதுக்கு உட்பட்டவருக்கான பிரிவில் ஆகாஷ் மித்ரன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 14 வயதினருக்கான பிரிவில் ஜயேஷ், சர்வா, விஷ்ணு ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும், ரியான்ஸ் ஆண்டர்சன், மித்தேஷ், அகிலேஷ், ஐவின், கனிஷிக் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை