விடுதிகளில் கலெக்டர் ஆய்வு
கோவை: சிங்காநல்லுார் மாணவியர் விடுதி, கவுண்டம்பாளையம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதிகளில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள், சரவணம்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, துடியலுார் - சரவணம்பட்டி சாலை சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார். கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் உள்விளையாட்டு அரங்கப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.