மேலும் செய்திகள்
இலக்குகளை அடைய தேவையான குணநலன்கள்!
03-Mar-2025
கோவை; சங்கரா கல்வி நிறுவனங்களின் கல்லுாரி தினக்கொண்டாட்டம், கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. திரைப்பட நடிகை கயடு லொஹர், நிகழ்வுகளை துவக்கிவைத்தார். கல்லுாரி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளில் பங்கேற்று, பார்வையாளர்களை அசத்தினர். தவிர, திறன் சார்ந்த போட்டிகளும் நடத்தப்பட்டன. கல்வி மற்றும் கல்வி சாராதவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.சங்கரா கல்வி நிறுவனங்களின், நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன், இணைச் செயலாளர் கல்யாணராமன், அறங்காவலர்கள் வசந்தராமன், சாஹித், பட்டாபிராமன், முதல்வர் ராதிகா, சங்கரா பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
03-Mar-2025