மேலும் செய்திகள்
பணி நிறைவு பாராட்டு விழா
29-Mar-2025
வேலுார்:வேலுாரில் பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி துணை முதல்வரை போலீசார் கைது செய்தனர்.வேலுாரிலுள்ள, ஊரீஸ் கல்லுாரி துணை முதல்வர் அன்பழகன், 52. இவர், அதே கல்லுாரியில் பணியாற்றிய பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வேலுார் மகளிர் போலீசார், கடந்த மாதம் வழக்கு பதிந்தனர். அன்பழகன் தலைமறைவானார்.கல்லுாரி மாணவ -- மாணவியர், அன்பழகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, ஊர்வலமாக சென்று அவரை கைது செய்யக்கோரி, வேலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை கடந்த மாதம் முற்றுகையிட்டனர். தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம், ராசன் பள்ளியில் பதுங்கியிருந்த அன்பழகனை நேற்று அதிகாலை கைது செய்தனர்.
29-Mar-2025