உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைகளை சொல்ல வாருங்கள்; முதியோருக்கு கலெக்டர் அழைப்பு

குறைகளை சொல்ல வாருங்கள்; முதியோருக்கு கலெக்டர் அழைப்பு

கோவை; கோவையில் ஓய்வு பெற்ற அரசுப்பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் பி.பி.ஓ.,எண், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள், இதுவரை கிடைக்கப்பெறாமல் இருப்பின், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற விபரங்களை தெளிவாக, ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்து, இரட்டை பிரதிகளில் பிப்., 28 க்குள், அனுப்பி வைக்க வேண்டும்.ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம், மார்ச் 28ல் காலை 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். அதில் பங்கேற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி