உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

வடவள்ளி: மருதமலை சுப்ர மணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.நேற்று அதிகாலை, 5:10 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி, வைரமுடி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:30 மணிக்கு, விநாயகர் பூஜை, புண்ணியாகம், பஞ்சகவ்யம், இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், யாகசாலை பூஜை நடந்தது. காலை, 10:35 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுப்ரமணிய சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதன் பின், கால சந்தி பூஜையும் நடந்தது. தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமி, கற்பக விருச்ச வாகனத்திலும், மாலையில், ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டி துவக்க விழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள பார்க்கிங் வரை, இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், அடிவாரத்தில், வாகனங்களில் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ