மேலும் செய்திகள்
சமுதாயக்கூடம் திறப்பு
18-May-2025
மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சியில், ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. சிறுமுகையை சுற்றி ஆறு திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் கட்டணம் அதிகமாக இருப்பதால், உயர் தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் சிறுமுகை பேரூராட்சியில், சமுதாயக்கூடம் கட்ட தமிழக அரசு, ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. பழைய போலீஸ் ஸ்டேஷன் இருந்த இடத்தில், தற்போது சமுதாயக்கூடம் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.இதுகுறித்து பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் கூறியதாவது:சிறுமுகை பேரூராட்சியில், பழத்தோட்டம் அருகே பழைய போலீஸ் ஸ்டேஷன் இருந்த இடம் பேரூராட்சிக்கு சொந்தமானது. அந்த இடத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், 2600 சதுர அடியில், புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் தரை தளத்தில் சமையல் கூடமும், உணவு அருந்தும் மண்டபமும் கட்டப்படுகிறது.முதல் மாடியில் மணமகன், மணமகள் அறைகள் தனித்தனியாகவும், வரவேற்பு ஹால் பெரிதாகவும் கட்டப்படுகிறது. கட்டி முடித்த பின் திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களுக்கும், பொதுமக்கள் உபயோகத்திற்கு, வாடகைக்கு விடப்படும்.இதனால் பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். இவ்வாறு தலைவர் கூறினார்.
18-May-2025