உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.பி.வேலுமணி பற்றி விமர்சித்தவர் மீது புகார்

 எஸ்.பி.வேலுமணி பற்றி விமர்சித்தவர் மீது புகார்

கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணி குறித்து, பேஸ்புக்கில் விமர்சித்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., வக்கீல் அணி செயலாளர் தாமோதரன், வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கணேசன் ஆகியோர், தமிழக காவல் துறை டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து, அனுதங்கசாமி என்பவர் முகநுால் பக்கத்தில், 'ஏஐ' தொழில்நுட்பத்தில் சித்தரித்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலில் , வேலுமணி விழுவது போல சித்தரித்து, 'எதுக்கு இந்த மானங் கெட்ட பிழைப்பு' என்று பதிவு செய்துள்ளார். வேலுமணி புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முகநுாலில் பதிவிட்ட, அனுதங்கசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !