உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் குடிநீரில் புழுக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார்

பில்லுார் குடிநீரில் புழுக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார்

சூலுார், ;சூலுார் அடுத்த அரசூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொள்ளுப் பாளையம் கிராமம். இங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் வினியோகிக்கப்பட்ட பில்லுார் குடிநீரில் புழுக்கள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அக்குடிநீரை குடித்த சிலருக்கு, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சுகாதாரத்துறை ஆய்வாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:சில நாட்களுக்கு முன் குடங்களில் பிடித்து வைக்கப்பட்ட பில்லுார் குடிநீரை குடித்த, முதியவர்கள், குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்துள்ளோம். உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் இரண்டும், ஒரே குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. தனித்தனி குழாய் பதிக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எதுவும் செய்யவில்லை. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளுக்கு முன் உறிஞ்சு குழிகள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த வழியாக குடிநீர் குழாய் செல்வதால், கழிவு நீர் கலந்து இருக்கலாம். அதனால், குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகம் சோதனை செய்ய வேண்டும். தனித்தனியே குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !