உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்கை எம்.எல்.ஏ., கலெக்டரிடம் புகார் 

சிங்கை எம்.எல்.ஏ., கலெக்டரிடம் புகார் 

கோவை: தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும், செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, சிங்காநல்லுார் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,ஜெயராம், கோவை கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த, காளிக்கோனார் என்பவரின் வாரிசுகளில் சிலர், தங்கள் மூதாதையர் நிலத்தை, சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,ஜெயராம் உள்ளிட்ட சிலர் அபகரித்துக்கொண்டதாக, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, தனக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி, சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்,ஏ.,ஜெயராம், கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும், பொதுவெளியில் சட்டத்துக்கு புறம்பாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் செயல்படும், காளிக்கோனாரின் வாரிசுகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்துக்கு உடந்தையாகவும், பின்புலமாகவும் இருந்து செயல்படும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயராம் வலியுறுத்தியுள்ளார். காளிக்கோனாரின் வாரிசுகள் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் உத்தமராமசாமி மீதும், இதே போன்ற புகார்களை கூறியிருந்ததால், அவர் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ