உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சேலம் வரை 49,000 விதை பந்து வீசி கண்டக்டர் சாதனை

 சேலம் வரை 49,000 விதை பந்து வீசி கண்டக்டர் சாதனை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில், கண்டக்டராக இருப்பவர் அறிவழகன். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுதல், கைகளை பின்னால் கட்டியபடி சைக்கிள் ஓட்டுதல் உள்பட பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து சேலம் வரை நடந்து, வழி நெடுக, 49,000 விதை பந்துகளை வீசும் சாதனை பயணத்தை நேற்று துவக்கினார். கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ரவி தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தி.மு.க. செயலாளர்கள் அசரப்அலி, முனுசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், கொடியசைத்து துவக்கி வைத்தார். சாதனையை பதிவு செய்ய ஒரு குழு அறிவழகனுடன் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ