குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
அன்னுார்; ஆணையூர் அரசு பள்ளியில், தமிழ் வழியில் பயின்ற இரண்டு பேர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியானது.இதில் அன்னுார் அருகே உள்ள ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வழியில் படித்து, போயனுாரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவராஜ் மகன் கோகுல் குமார் தேர்ச்சி பெற்றுள்ளார்.இவருக்கு இளநிலை ஆய்வாளராக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதே போல், மூக்கனுாரைச் சேர்ந்த விவசாயி நாகராஜன் மகள் நந்தினி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் வனத்துறையில் இளநிலை உதவியாளராக பணி ஒதுக்கீடு பெற்றுள்ளார்.கிராமப்புறத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து, குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற இருவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.